இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெளியான நெஞ்சம் மறைப்பதில்லை திரைப்படம் வருகின்ற மே 14 ரம்ஜான் தினத்தையொட்டி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் கடந்த மார்ச் மாதம் 5 ஆம் தேதி வெளியான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இந்த படத்தில் ரெஜினா கசாண்ட்ரா , நந்திதா ஸ்வேதா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் படத்தில் இடம்பெற்ற அணைத்து பாடல்களும் தற்போது வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தற்போது அதற்கான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் வருகின்ற மே 14 ரம்ஜான் தினத்தையொட்டி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.
unknown node