#HBDNayanthara: நயன்தாரா நடிப்பில் அடுத்தடுத்து உருவாகும் படங்களின் லிஸ்ட் இதோ.!

நயன்தாரா நடிப்பில் அடுத்தடுத்து உருவாகும் படங்களின் லிஸ்ட் குறித்து அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக கூறப்பட்டுள்ளது.

நயன்தாரா நடிப்பில் அடுத்தடுத்து உருவாகும் படங்களின் லிஸ்ட் குறித்து அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக கூறப்பட்டுள்ளது.

நடிகை நயன்தாரா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள மொழியிலும் பிரபல நடிகையாக திகழ்கிறார் . லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா பெண் கதாபாத்திரத்தை மட்டுமே மையமாக உருவாகும் படங்களிலும் நடித்து தனக்கென்று பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

unknown node

இந்த நிலையில்,இன்று நயன்தாரா தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் .அவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலர் சமூக ஊடகங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக அடுத்ததாக இவரது நடிப்பில் உருவாகவிருக்கும் படங்களின் லிஸ்ட் இதோ,

நெற்றிக்கண்:

unknown node

நயன்தாரா நடிக்கும்  நெற்றிக்கண் படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்க மிலிந்த் ராவ் இயக்குகிறார். இவர் 2017ஆம் ஆண்டு வெளியான அவள் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நயன்தாரா பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ளார் .தனது அறிவை பயன்படுத்தி கொலை செயய்யும் சீரியல் கில்லரை எவ்வாறு கண்டுபிடிக்கிறார் என்பது தான் கதை . திரில்லர் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்த படத்தில் நயன்தாரா துணிச்சலான பெண்ணாக நடித்துள்ளார் . இந்த படம் 2021-ல் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

காத்து வாக்குல ரெண்டு காதல்:

unknown node

நானும் ரவுடி தான் படத்திற்கு பின்னர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை வைத்து இயக்கும் அடுத்த படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து சமந்தாவும் நடிக்கவுள்ளார் . மேலும் இந்த படத்தில் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் . ஏற்கனவே விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அண்ணாத்த:

unknown node

சூப்பர் ரஜினிகாந்த் உடன் தர்பார் படத்தை தொடர்ந்து அண்ணாத்த படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளார். சிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . கொரோனா காரணமாக தடை செய்யப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது .

நிழல்:

unknown node

மலையாள திரைப்படமான நிழல் படத்தில் நயன்தாரா குஞ்சாக்கோ போபனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் இவரது நடிப்பில் கடைசியாக வெளியான லவ் ஆக்ஷன் டிராமா திரைப்படம் தோல்வியை தழுவியதால் நயனின் நிழல் திரைப்படம் அதனை ஈடுகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி வரும் நயன்தாரா இந்த வருடம் கமிட்டாகியுள்ள அனைத்து படங்களும் மெகா ஹிட் அடிக்க வேண்டும் என்று கூறி அவருக்கு எங்கள் தினச்சுவடு குழு தொடர்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.