மகிழ்ச்சியாக உள்ளது, மாஸ்டர் படம் குறித்து ஈஸ்வரன் இயக்குனர் பதிவு!

Suchindran, who directed the Eeswaran film, said in a post on his Twitter page that he enjoyed watching the film in his hometown.

மாஸ்டர் படத்தை தனது சொந்த ஊரில் பார்த்து ரசித்ததாகவும் மகிழ்ச்சியாக உள்ளது எனவும் ஈஸ்வரன் படத்தை இயக்கியுள்ள சுசீந்திரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சிம்பு நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகி இருக்கும் ஈஸ்வரன் படத்தை இயக்கிய சுசீந்திரன் அவர்கள் விஜய்யின் மாஸ்டர் படத்தை குறித்து தற்போது பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் மகிழ்ச்சியாக உள்ளது எனவும், மாஸ்டர் படத்தை தனது சொந்த ஊரில் உள்ள ஒரு தியேட்டரில் பார்த்து ரசித்ததாகவும், மாஸ்டர் படம் விஜய்யின் துப்பாக்கி படத்துக்கு பிறகு அவருக்கு மாஸ்டர் பீஸாக அமைந்துள்ளதாகவும் பிரமாதமான நடிப்பு எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இது போன்ற ஒரு கதையை விஜய்க்கு கொடுத்த லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு நன்றி எனவும் திரைக்கதை தொடங்கி நடிகர்கள் நடிகைகள் வரை சரியாக தேர்வு செய்திருக்கிறார் எனவும், மேலும் விஜய் சேதுபதியின் வில்லத்தனத்தை ரசிக்கும்படி செய்திருப்பதாகவும், பொங்கலுக்கு ஒரு வெற்றி படமாக இந்த படம் அமைந்திருப்பதாகவும் படக்குழுவுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.