"ஹேப்பி பர்த்டே தங்கமே"- காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த விக்கி.!

நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு காதலரான விக்னேஷ் ஸ்வீட்டான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு காதலரான விக்னேஷ் ஸ்வீட்டான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நடிகை நயன்தாரா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள மொழியிலும் பிரபல நடிகையாக திகழ்கிறார் . லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா பெண் கதாபாத்திரத்தை மட்டுமே மையமாக உருவாகும் படங்களிலும் நடித்து தனக்கென்று பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தொடர்ந்து அண்ணாத்த, நெற்றிக்கண், காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நயன்தாரா இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார் .

அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலர் சமூக ஊடகங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநரும் , நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் தனது காதலிக்கு ஸ்வீட்டான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதில் ஹேப்பி பர்த்டே தங்கமே .. அர்ப்பணிப்பு, நேர்மை மற்றும் கடின உழைப்பாளியாக இருக்கும் நீங்கள் மேலும் மேலும் உயரத்தில் பறக்க வேண்டும் . எப்போதும் மகிழ்ச்சியையும் , நிலையான வெற்றியையும் மட்டுமே உங்களுக்கு கடவுள் அளிப்பார் . அற்புதமான தருணங்கள் நிறைந்த மற்றொரு வருடத்திற்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் நயன்தாராவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

unknown nodeunknown node