நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள மாரி-2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார்.
unknown nodeஇந்நிலையில், நடிகர் தனுஷ் நாளை தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இதனையடுத்து புதுச்சேரியில் உள்ள தனுஷ் ரசிகர் மன்ற நிர்வாகிகள், புதுச்சேரி கடலில் காந்தி சிலையின் பின்புறம் நடுக்கடல் பகுதியான பழைய துறைமுக கம்பிகள் மீது நடிகர் தனுஷின் பிறந்தநாள் வாழ்த்து பேனரை அமைத்துள்ளனர்.