அமோக வரவேற்பு..”கலகத்தலைவன்” படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

Default Image

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “கலகத்தலைவன்”. இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு ஸ்ரீ காந்த தேவா இசையமைக்கிறார். நிதி அகர்வால் ஹீரோயினாக நடித்துள்ளார்.

அதிரடி ஆக்சன் காட்சிகளை கொண்ட இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த பலரும் பாசிட்டிவான கருத்துக்களை கூறி வருகிறார்கள். எனவே படத்திற்கு முதல் நாளில் வசூலில் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது.

இதையும் படியுங்களேன்- பாபி சிம்ஹா இருந்தால் அந்த படத்தில் நடிக்க மாட்டேன்… அந்தர் பல்டி அடித்த சிவகார்திகேயன்.!

 இந்நிலையில், படம் வெளியான முதல் நாளில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, படம் வெளியான முதல் நாளில் மட்டும் தமிழகத்தில் 3 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் நாட்களில் இன்னும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்