அந்த செய்தி முற்றிலும் வதந்தி – கௌதம் வாசுதேவ மேனன் ஓபன் டாக்!

கடந்த சில வருடமாக படங்கள் எதுவும் இயக்காமல் இருந்த கௌதம் வாசுதேவ் மேனன் தற்போது மீண்டும் பட இயக்கத்தில் பிஸியாக உள்ளார். அவரது இயக்கத்தில் கடைசியாக எனை நோக்கி

கௌதம் வாசுதேவ் மேனன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு கதை கூறியுள்ளார் என தகவல் பரவி வந்தது.

இந்த தகவலை கௌதம் வாசுதேவ் மேனன் மறுத்துள்ளார். அவருக்கான கதை ரெடி. ஆனால், அதனை இன்னும் அவரிடம் கூறவில்லை என தெரிவித்துள்ளார்.

கடந்த சில வருடமாக படங்கள் எதுவும் இயக்காமல் இருந்த கௌதம் வாசுதேவ் மேனன் தற்போது மீண்டும் பட இயக்கத்தில் பிஸியாக உள்ளார். அவரது இயக்கத்தில் கடைசியாக எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ் ஆகியிருந்தது. அதனை தொடர்ந்து ஜோஸ்வா எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தை அடுத்து விக்ரம் நடிப்பில் தயாராகி வந்த துருவநட்சத்திரம் படத்தின் இறுதிகட்ட பணிகளை மேற்கொள்வார் என கூறப்படுகிறது. இதற்கிடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் கௌதம் வாசுதேவ் மேனன் கதை கூறியுள்ளார் என தகவல் வெளியாகி வந்தது.

unknown node

இந்த தகவல் குறித்து கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு பேட்டியில் குறிப்பிடுகையில், ‘ நான் ஏற்கனவே ரஜினியிடம் கதை கூறி இருந்தேன். அது கபாலி படத்திற்கு முன்னதாக தான். ஆனால் அதற்கடுத்ததாக அவரிடம் நான் எந்த கதையும் கூறவில்லை. அவருக்கான கதை ஒன்று எழுதி வைத்துள்ளேன். அதை அவரிடம் கூற சந்தர்ப்பம் கிடைத்தால் கூறுவேன். ஆனால், நான் ஏற்கனவே கதை கூறிவிட்டதாக வரும் செய்திகள் வதந்தி என கூறியுள்ளார்.

மேலும், நான் சூர்யாவிற்கு தற்போது கதை எழுதி வருகிறேன். விரைவில், அதனை அவரிடம் கூறி அவருக்கு பிடித்திருந்தால் சூர்யாவை விரைவில் இயக்குவேன்.’ என  அந்த பேட்டியில் கூறியுள்ளார்.