கார்த்தியின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் தெரியுமா.?

நடிகர் கார்த்தி தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் விருமன் திரைப்படத்திலும் நடித்துமுடித்துள்ளார். இதில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும்

நடிகர் கார்த்தி தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் விருமன் திரைப்படத்திலும் நடித்துமுடித்துள்ளார். இதில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகிறது. விரைவில் விருமன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படவுள்ளது.

unknown node

இந்த படங்களை தொடர்ந்து தற்போது இயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ராஷிகண்ணா, ராஜீஷா விஜயன் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

unknown node

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக ‘ஜோக்கர்’ புகழ் பெற்ற இயக்குனர் ராஜு முருகனுடன் கார்த்தி கைகோர்க்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

unknown node

இந்த கார்த்தி – ராஜு முருகன் திட்டம் இயக்கி கார்த்தி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மே மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகும் ‘சர்தார்’ படத்தின் படப்பிடிப்பை கார்த்தி ஏப்ரல் மாதம் முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.