கருப்பு படத்தில் முதலில் நடிக்கவிருந்தது முதல்வர் விஜயா?

கருப்பு படத்தில் முதலில் நடிக்கவிருந்தது விஜயா என சமூக வலைதளங்களில் பலரும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

Hero Image

சென்னை : சூர்யா ரசிகர்கள் பல ஆண்டுகளாக முழுமையான கமர்ஷியல் மாஸ் திரைப்படத்திற்காக காத்திருந்த நிலையில், அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ள “கருப்பு” திரைப்படம் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சமீப காலமாக சூர்யா நடிப்பில் வெளியான “ரெட்ரோ” மற்றும் “கங்குவா” திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், வசூல் மற்றும் விமர்சன ரீதியாக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் “கருப்பு” திரைப்படத்தின் மீது ஆரம்பத்திலிருந்தே அதிக கவனம் நிலவியது.

படத்தின் First Look, பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியான பிறகு ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது. குறிப்பாக, கிராமத்து பின்னணி, கருப்பசாமி சம்பந்தப்பட்ட காட்சிகள், சூர்யாவின் மாஸ் தோற்றம் மற்றும் பின்னணி இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இருப்பினும், “அதிக எதிர்பார்ப்பு வைத்தால் ஏமாற்றம் ஆகிவிடுமோ” என்ற சிறிய பயமும் ரசிகர்களிடம் இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் படம் வெளியான பிறகு ரசிகர்ளின் வரவேற்பு முற்றிலும் வேறு நிலைக்கு சென்றுள்ளது. “சூர்யாவிடம் இருந்து இதுதான் எதிர்பார்த்தோம்” என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, சூர்யாவின் திரை முன்னிலை, ஆக்ஷன் காட்சிகள் மற்றும் உணர்ச்சிப் பூர்வமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளதாக பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதற்கிடையில், “கருப்பு” திரைப்படம் தொடர்பாக வெளியாகியுள்ள மற்றொரு தகவலும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதாவது, இந்த படத்தின் கதை முதலில் நடிகர் விஜய்யிடம் சொல்லப்பட்டதாக இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி முன்னதாக ஒரு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.

கதை விஜய்க்கு மிகவும் பிடித்திருந்ததுடன், உடனடியாக படத்தை தொடங்க வேண்டும் என்ற ஆர்வமும் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், திரைக்கதையை முழுமையாக வடிவமைக்க கூடுதல் காலம் தேவைப்பட்டதால், அந்த திட்டம் அப்போது முன்னேறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

பின்னர் விஜய் அரசியலில் கவனம் செலுத்த தொடங்கிய நிலையில், கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு சூர்யாவிடம் சொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “விஜய் நடித்திருந்தால் படம் எப்படி இருந்திருக்கும்?” என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், “கருப்பு” திரைப்படம் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கும் என சூர்யா ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். அதேசமயம், ஜூன் 18ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக உள்ள “ஜனநாயகன்” திரைப்படமும் பெரிய வசூல் சாதனை படைக்கும் என விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.