நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் திரையுலகில் தொடர்ந்து ஹீரோயினாக மட்டுமில்லாமல், வில்லி கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி வருகிறார். இவருக்கு சமீபகாலமாக தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருவதால் சென்னையை விட்டு ஹைதராபாத்திற்கு சென்றுவிட்டார். இப்போது அங்கு தான் வசித்தும் வருகிறாராம்.
unknown nodeஇதற்கிடையில், வரலட்சுமி சரத்குமாருக்கு இப்போது திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதாக சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது. அவருக்கு அடுத்து தங்கைக்கும் திருமணம் செய்ய வேண்டியிருப்பதால் இப்போது திருமண ஏற்பாட்டிற்கு வரலட்சுமி சம்மந்தம் தெரிவித்துவிட்டாராம்.
unknown nodeஇவர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க அவரது தங்கையின் பொருட்டு சம்மதம் சொல்லிவிட்டதாகத் சொல்லப்படுகிறது . ஒரு பக்கம் வரலட்சுமியின் தந்தையும், நடிகருமான சரத்குமார் தீவீரமாக நல்ல மாப்பிள்ளையை தேடி வருகிறாராம்.
unknown nodeமற்றோரு பக்கம் அம்மா சாயா மாப்பிள்ளை தேடுகிறாராம். இதனால் நடிகை வரலட்சுமி ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு திரும்பப் போகிறார் எனவும் கூறப்படுகிறது. திருமணம் உறுதியான பிறகு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வரலட்சுமியே அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.