தல அஜித், சூப்பர் ஸ்டார் ரஜினியை தொடர்ந்து இறங்கி அடிக்க உள்ள தளபதி விஜய்?!

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எக்ஸ்.பி பட நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய்

தளபதி விஜயின் 64வது திரைப்படமாக மாஸ்டர் படம் தயாராகி வருகிறது.

அவரது 65வது படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க உள்ளது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எக்ஸ்.பி பட நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார். இப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாக உள்ளது.

இப்படத்தை தொடர்ந்து விஜய் தனது 65வது படத்திற்கான வேளைகளில் தற்போதே பிசியாகி வருகிறார். இப்படத்தை இயக்கும் இயக்குனர்கள் லிஸ்ட்டில் ஏற்க்கனவே வெற்றிமாறன், மகிழ் திருமேனி, அருண் ராஜா காமராஜா, ஏ.ஆர்.முருகதாஸ் என பலர் உள்ளனர்.

unknown node

இந்நிலையில், கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களை இயக்கிய பாண்டிராஜ் தற்போது புதியதாக இந்த லிஸ்டில் இணைந்துள்ளாராம். தல அஜித்தின் விஸ்வாசம் கிராமத்து பின்னணியில் வெளியாகி வெற்றிபெற்றது. அதே போல, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் தற்போது கிராமத்து பின்னணியில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

அதே போல தளபதி விஜயும் கிராமத்து பின்னணியில் ஒரு படத்தில் நடிக்க விருப்பமாகியுள்ளராம். அதனால், பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க விஜய் நடிக்க அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. மேலும், நம்ம வீட்டு பிள்ளை வெற்றி படத்தை தொடர்ந்து மீண்டும் பாண்டிராஜ் இயக்கும் படத்தை தயாரிக்க சன் பிக்ச்சர்ஸ் ஆவலாக உள்ளதாம். விரைவில் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.