விக்ரம் பிரமாண்ட இசை விழாவில் காத்திருக்கும் தளபதி 67 சர்ப்ரைஸ்.!

தமிழ் சினிமா ரசிகர்கள் அடுத்தாக காத்திருக்கும் திரைப்படம் விக்ரம். கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர்

தமிழ் சினிமா ரசிகர்கள் அடுத்தாக காத்திருக்கும் திரைப்படம் விக்ரம். கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

unknown node

இந்த திரைப்படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இத்தனை முன்னிட்டு இந்த படத்தின் ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா நாளை சென்னையில், உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

unknown node

இந்த விழாவிற்கு ரஜினி, விஜய், சூர்யா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வார்கள் என இணையத்தில் செய்திகள் பரவியது. இதனையடுத்து புதியதாக ஒரு தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

unknown node

அதுஎன்னவென்றால் , நாளை விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கான அறிவிப்பு வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜயின் 66-வது படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்குவார் என்ற தகவல் பரவி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.