தளபதி 64 அப்டேட்ஸ்! ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனாவா? ராசிகண்ணாவா?

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இப்படத்தை அட்லி இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இப்படத்தை அட்லி இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை அடுத்து விஜய்,  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. இப்படமும் ஆக்ஷன் கலந்து குடும்ப சென்டிமென்ட் கதையாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க முதலில் ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். அதேபோல ராசிகன்னாவிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். அக்டோபரில் ஷூட் ஆரம்பிப்பதால் விரைவில் படத்தின் ஹீரோயின் யார் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்கள் போக பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த மாளவிகாவிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளதாம். அவரும் முக்கிய ரோலில் நடிக்க வாய்ப்பு உள்ளதாம்.