ஒரு திரைப்படம் வெளியாகி வெற்றிபெறுவதற்கு இசை எவ்வளவு முக்கியம் என்பது அனைவர்க்கும் தெரியும். அந்த இசை மிகவும் ரசிகர்களுக்கு பிடித்தவாறு வழங்க இசையமைப்பாளர்கள் தீவிரமாக வேலை செய்வார்கள். அப்படி தான் அனிருத்தும் கூட, சமீப கமலமாக இவரது இசையில் வெளியாகும் படங்கள் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுவிடுகிறது.
unknown nodeஇதனாலேயே அனிருத்துக்கு பெரிய பட்ஜெட் படங்களே குவிந்து வருகிறது. இதுவரை 27 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் அனிருத் சிவகார்த்திகேயனுக்கு மட்டுமே 7 படங்களுக்கு இசைமைத்துள்ளார். இதனையடுத்து மீண்டும் 8-வது முறையாக அனிருத் சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
unknown nodeஅதன்படி, இயக்குனர் ராஜ்குமார் பெரிய சாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள 21-வது படத்தை நடிகர் கமல்ஹாசன் தான் தயாரிக்கவுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூட கடந்த மாதம் வெளியானது.
unknown nodeஆனால், படத்திற்கு யார் இசையமைக்க போகிறார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இதனையடுத்து, இந்த படத்திற்கும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
unknown nodeஏற்கனவே, இவர்களது கூட்டணியில் வெளியான எதிர்நீச்சல், காக்கி சட்டை, மான் கராத்தே, வேலைக்காரன் , டாக்டர், டான் ஆகிய படங்களின் பாடல்கள் மற்றும் படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.