பா.ரஞ்சித் தற்போது இயக்கி வரும் நட்சத்திரங்கள் நகர்கின்றன திரைப்படமானது தன் பாலின ஈர்ப்பாளர்கள் பற்றிய கதைக்களம் என கூறப்படுகிறது.
தனது கருத்துக்களை எந்தவித சமரசமும் இல்லாமல் படத்தில் புகுத்தி அதில் வெற்றிகளையும் கண்டவர் இயக்குனர் பா.ரஞ்சித். மெட்ராஸ், கபாலி, காலா என இவர் பேசிய அரசியல் சினிமாவை தாண்டி அரசியல் களம் வரை பிரதிபலிக்கிறது.
unknown nodeகடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பை பெற்றது.
unknown nodeஇந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நட்சத்திரங்கள் நகர்கின்றன எனும் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், கலையரசன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் பா ரஞ்சித், LGBT எனப்படும் தன் பாலின ஈர்ப்பாளர்கள் பற்றிய கதையம்சம் கொண்டதாம். இன்னும் இந்த விஷயம் பற்றி தமிழகத்தில் வெளிப்படையான பேச்சுக்கள் இல்லை. தற்போது பா ரஞ்சித் போன்ற இயக்குனர் இதனை கையில் எடுத்து படமாக்குவது உண்மையானால் அதுவும் தமிழகத்தில் பேசுபொருளாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.