சென்ற ஆண்டு இதே டிசம்பர் மாதம் வெளியாகி இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பு பெற்ற திரைப்படம் கேஜிஎப். படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகி இருந்தது. இப்படத்தில் யாஷ் தனது நடிப்பின் மூலம்ராக்கி பாயாக அசத்தி இருந்தார்.
இப்படத்தை பிரசாந்த் நீல் என்பவர் இயக்கியிருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வேகமாக தயாராகி வருகிறது. இந்த இரண்டாம் பாகத்தில் வில்லனாக பாலிவுட் முன்னணி நடிகர் சஞ்சய் தத் நடித்துவருகிறார் .கதாநாயகனாக யாஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் வரும் ஜனவரி 8ஆம் தேதி யாஷ் பிறந்தநாள் கொடாடுகிறார். அந்நாளில் கே.ஜி.எஃப்-2 படத்தின் முக்கிய அப்டேட் அல்லது டீசர் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.