விளம்பர படத்திற்கே இத்தனை லட்சம் சம்பளம் வாங்குகிறாரா நடிகை சினேகா.?

Actress Sneha is reportedly earning Rs 2 lakh a day for a promotional film.

நடிகை சினேகா விளம்பர படத்திற்காக ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகை சினேகா . தமிழின் முன்னணி நடிகையாக இருந்து வந்த இவர் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு சில காலம் குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார் .

அதன் பின் பல விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் தெலுங்கு மற்றும் தமிழில் ஒரு சில படங்களில் நடித்தார் . கடைசியாக இவர் தனுஷின் பட்டாசு படத்தில் நடித்திருந்தார் .இந்த நிலையில் பல விளம்பர படங்களில் கணவருடன் இணைந்து நடிக்கும் இவர் ஒரு விளம்பர படத்திற்கு சம்பளம் எவ்வளவு வாங்குகிறார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது நடிகை விளம்பர படத்திற்காக ஒரு நாளைக்கு ரூ 2 லட்சம் சம்பளமாக பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.