பிக் பாஸ் சீசன் 6 -இல் களமிறங்கும் பிரபல பாடகி.?

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் 6-வது சீசன் விரைவில்

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் 6-வது சீசன் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதில் 5-வது சீசனில் ராஜு ஜெயமோகன் டைட்டிலை தட்டி சென்றார்.

unknown node

இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. ஏனென்றால், இதில் கலந்து கொண்ட பிரபலங்கள் அடிக்கும் லூட்டிகள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துவிடும். நடந்து முடிந்த 5 சீசன்களையும் உலக நாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார்.

unknown node

இதனை தொடர்ந்து, 6 வது சீசனுக்கான வேலைகள் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது. அனேகமாக அக்டோபர் மாதம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என தெரிகிறது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது பரவி வருகிறது.

unknown node

அந்த வகையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், ‘சின்ன மச்சான்’ பாடலை பாடிய நாட்டுப்புற பின்னணி பாடகி ராஜலட்சுமி பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளாராம். தொடர்ந்து பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சிகளில் ஏகப்பட்ட பாடகர்கள் பங்கேற்றுள்ள நிலையில், இந்த முறை ராஜலட்சுமி கலந்து கொள்ளவுள்ளாராம். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.