வருடம்..வருடம் பொங்கல் பண்டிகை என்றாலே இதனை முன்னிட்டு, பெரிய நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாவது வழக்கம். அந்த வகையில் வரும் (2023) ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படமும் அஜித் நடித்த வரும் “துணிவு” திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
unknown nodeVarisu Vs Thunivu [Image Source: Twitter ]
இந்த திரைப்படத்தை பார்க்க அஜித், விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர் எனவே இரண்டு திரைப்படத்திற்கும் வசூல் ரீதியாக நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, மேலும் ஒரு நடிகரின் திரைப்படம் பொங்கல் தினத்தில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
unknown nodeVimal New Movie [Image Source: Twitter ]
அவர் வேற யாரும் இல்லை ஒரு காலத்தில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த விமல் தான். அட ஆமாங்க விமல் தற்போது ஒரு புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை விஜய், பிரியங்கா சோப்ரா வைத்து ” தமிழன்” படத்தை இயக்கிய அப்துல் மஜித் தான் இயக்கியுள்ளார்.
unknown nodeVimal New Movie [Image Source: Twitter ]
பெயர் வைக்கப்படாத இந்த படத்தில் சாம்பிகா, யோகி பாபு, ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விரைவில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவுள்ளது. இந்த படம் வாரிசு மற்றும் துணிவு படங்களுடன் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.