தமிழிலும் பட்டையை கிளப்ப ரெடியாகும் அல்லு அர்ஜுன்.! அதுவும் பிரபல இயக்குனர் படத்திலாமே.?

It has been reported that Allu Arjun will soon make his Tamil debut with a film directed by Gautham Menon.

அல்லு அர்ஜுன் விரைவில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெலுங்கின் மூன்னணி நடிகராக இருந்தாலும் தமிழ், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ரசிகர்களை வைத்திருப்பவர் அல்லு அர்ஜுன்.தற்போது ரஷ்மிகா மந்தானாவிற்கு ஜோடியாக புஷ்பா படத்தில் நடித்து வருகிறார் .

இந்த நிலையில் இவருக்கு நேரடி தமிழ் படத்தில் நடிப்பது தனது ஆசை என்று பல இடங்களில் கூறியுள்ளார்.அதற்காக பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.அதன் படி அல்லு அர்ஜுனுக்கு கௌதம் மேனன் கூறிய கதை பிடித்து விட்டதாகவும்,எனவே விரைவில் அல்லு அர்ஜுன் நேரடி தமிழ் படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன .இது அல்லு அர்ஜுனின் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.