கார்த்தி நடிப்பில் நேற்று வெளியான விருமன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. கிராமத்து பின்னணியை வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்கியுள்ளார்.
unknown nodeஇந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் இணைந்து 2டி என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசைமைத்துள்ளார். படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடித்திருந்தார்.
இதையும் படியுங்களேன்-அடுத்த படத்துல அவருக்கு ஒன்னு எழுதிருக்கேன்…ரகசியத்தை போட்டுடைத்த லோகேஷ்.!
unknown nodeபிரகாஷ் ராஜ், சூரி, ராஜ் கிரண், ஆர்.கே.சுரேஷ், சிங்கமுத்து, கருணாஸ் எனும் பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படம் தமிழகத்தில் மட்டும் 450 திரையரங்குகளுக்கு மேல் வெளியானது. இதுவே கார்த்திக்கு அதிகம் திரையரங்குகளில் வெளியான முதல் படமும் கூட.
இதையும் படியுங்களேன்-
unknown nodeஇந்நிலையில், 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் வெளியான முதல் நாளில் எதனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, விருமன் படம் வெளியான முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 5.5 கோடியும், உலகம் முழுவதும் 8 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.