பீஸ்ட் திரைப்படமும் எதற்கும் துணிந்தவன் படமும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக தகவல்.
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். தற்போது படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
unknown nodeஇப்படத்தில் செல்வராகவன், சைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், லில்லிபட் பரூக்கி போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை சன் பிக்சர்ஸ்நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
unknown nodeஇந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வரும் நவம்பர் மாதம் படப்பிடிப்பை முடித்து விட்டு படத்தை அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியீட திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், இதைபோல் நடிகர் சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
unknown nodeஇந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்துவருகிறார். மேலும் சத்தியராஜ்,யோகி பாபு, சரண்யா, சூரி, வினை, போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
unknown nodeஇந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தின் மூன்று லுக் போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாகியது என்றே கூறலாம்.
பீஸ்ட் vs எதற்கும் துணிந்தவன்..?
unknown nodeஇந்த நிலையில், விஜய் நடித்து வரும் பீஸ்ட் திரைப்படமும் சூர்யா நடித்து வரும் எதற்கும் துணிந்தவன் படமும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இரண்டு திரைப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதால் ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியாகும் என்பது சந்தேகம் தான். விரைவில் எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.