குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான சாரா தற்போது ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான தெய்வத்திருமகள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாரா அர்ஜூன். அதனையடுத்து சைவம் படத்திலும் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார் .இந்த நிலையில் தற்போது இவர் ஹீரோயினாக விவேக் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .
அருண் விஜய் அவர்களின் பாக்ஸர் படத்தை இயக்கும் விவேக் புதிய படத்தை இய்கவுள்ளதாகவும், இந்த படத்தில் பழிவாங்கும் கேரக்டரில் கல்லூரி மாணவியாக சாரா நடிக்கவுள்ளதாகவும் ,மேலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் பிரியாமணி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு டிசம்பரில் சென்னை உட்பட பல இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் , அதற்கு அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கப்படும் என்றும் இயக்குனர் விவேக் தெரிவித்துள்ளார்.