பொதுவாக எந்த முன்னணி நடிகரும் எடுக்க துணியாத ரிஸ்க்கை எடுக்கும் சூர்யா இது தான் விஷயமா

This news gives information about Generally any leading actorTake the unreliable risk Surya is this-pothuvaka entah munnani nadikarum edukka thuniyatha riskai edukum surya ithu thaan visayama

சூர்யா தமிழ் சினிமாவில் உள்ள டாப்  ஹீரோக்களில் ஒருவர்.

இவர் தற்போது ஒரு புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

சூர்யா தமிழ் சினிமாவில் உள்ள டாப்  ஹீரோக்களில் ஒருவர். இவர் தற்போது காப்பான், .என் ஜி கே என அடுத்தடுத்து படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கும் நிலையில் இவர் தற்போது ஒரு புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

நடிகர் சூர்யா ஏர் டெக்கான் நிறுவனத்தலைவர் கோபிநாத்தின் வாழ்க்கை படத்தில் நடிக்கிறார்.இந்த படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும்  சீக்யா எண்டர்டெயின்மெண்ட்-ன் குணீத் மோங்காவும் இணைந்து தயாரிக்கிறார் இருக்கிறார்கள்.

இந்த படத்தில் நடிகர் சூர்யாவின் கெட்டப் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்க பட்டு வரும் நிலையில் இந்த படத்தில் நடிகர் சூர்யா,  கதாபாத்திரத்திற்காக வழுக்கை தலையுடன் நடிக்க இருக்கிறாராம்.

இதையடுத்து இவர் படத்திற்காக பல ரிஸ்குகளை எடுத்து நடித்து வருவது ஒன்றும் புதிது கிடையாது. இவர் அதிகமாக  எந்த முன்னணி நடிகரும் எடுக்க துணியாத ரிஸ்க்கை தற்போது இவர் எடுத்துள்ளார்.இதனை கேட்ட ரசிகர்கள் சாக் ஆகிவிட்டார்களாம்.