அப்பவே தல அப்படி !தளபதி இப்படி ....ஓபன் டாக் ராஜாவின் பார்வையிலே ஹீரோயின் .....

மெட்டி ஒலி' சரோவாக மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை காயத்ரி.இவர் அஜித்துக்கு ஜோடியாக ராஜவின் பார்வையிலே படத்தில் நடித்தவர்  ஆவார்.சமீபத்தில் இவர் தல -தளபதி

மெட்டி ஒலி’ சரோவாக மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை காயத்ரி.இவர் அஜித்துக்கு ஜோடியாக ராஜவின் பார்வையிலே படத்தில் நடித்தவர்  ஆவார்.சமீபத்தில் இவர் தல -தளபதி பற்றி ஒரு ருசிகர தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

unknown node

காயத்ரி கூறியது , பாசமலர்கள்’ படத்தில் அஜித்தும் நடிச்சிருந்தார். பிறகு, ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில் அவருக்கு ஜோடியா நடிச்சேன்.

unknown node

அப்போ, அவர் வளர்ந்துட்டிருந்த ஹீரோ. ரொம்பவே கான்ஃபிடன்டா இருப்பார். ‘சில வருஷத்துக்குள்ளே பெரிய ஹீரோவா ஆகிடுவேன்’னு சொல்வார்.

unknown node

அது நடந்துச்சு. ஒருமுறை அவரை ஏர்போர்ட்ல மீட் பண்ணினேன். பழைய நினைவுகளோடு நல்லா பேசினார். விஜய் எப்பவும் அமைதியான டைப். ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தின்போதும் அமைதியாவே இருப்பார். கேமரா முன்னாடி வந்ததும் சட்டுனு மாறி அசத்துவார். ரெண்டு பேரும் ஆரம்பத்திலிருந்த மாதிரியே இப்பவும் எல்லோரிடமும் அன்பா பழகுறாங்க அது நல்ல விஷயம். இவங்களோடு மீண்டும் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைச்சா சந்தோஷப்படுவேன்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.