சாண்டியின் '3.33' படத்தில் இணைந்த கௌதம் மேனன்.!

It has been announced that Gautham Menon will be joining Sandy as the hero in 3.33.

சாண்டி ஹீரோவாக நடித்து வரும் 3.33 படத்தில் கௌதம் மேனன் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடன இயக்குனரான சாண்டி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.தற்போது இவர் ஹீரோவாக ‘3.33’ என்ற படத்தில் நடித்து வருகிறார். திரில்லர் கலந்த மர்மமான கொலை கதைக்களத்தை கொண்டஇந்த படத்தை அறிமுக இயக்குனரான சந்துரு இயக்க,அவரின் சகோதரியான ரமா தயாரிக்கவுள்ளார்.சதீஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஹர்ஷவர்த்தன் ரமேஷ்வர் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் சாண்டிக்கு ஜோடியாக அறிமுக நடிகையான ஸ்ருதி நடிப்பதாக கூறப்பட்டது.மேலும் சாண்டியுடன் ரேஷ்மா பசுபதி,சரவணன் ,மைம்கோபி ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் தற்போது சாண்டி ஹீரோவாக நடித்து வரும் 3.33 படத்தில் கௌதம் மேனன் இணைந்துள்ளதாக செக்கன்ட் லுக் போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது . ஏற்கனவே கௌதம் மேனன் ருத்ர தாண்டவம்,பத்து தல ஆகிய படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது .

unknown node