நடிகர் விஷ்ணு விஷால் , நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனரான இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கி இருந்தார். காமெடி கதைக்களத்தை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பலரும் படத்தை பார்க்க கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு சென்று வருகிறார்கள்.
unknown nodeGattaKusthi Completes 25 Successful Days [Image Source : Twitter]
கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் இன்றுடன் வெளியாகி 25 நாட்கள் ஆகிறது. 25 நாட்கள் ஆகியும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிது. பல தியேட்டர்களில் ஹவுஸ் புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இதையும் படியுங்களேன்-கனவு நினைவாகிவிட்டது…அண்ணனை பாத்துட்டேன்…கண்கலங்கிய செம்பருத்தி பார்வதி.!
unknown nodeGattaKusthi [Image Source : Twitter]
படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் நாட்களில் படத்திற்கான வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, படம் வெளியான 24 நாட்களில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. ஆம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 22 கோடிகள் வசூல் செய்து பெரிய வெற்றிப்படமாக மாறியுள்ளது.
unknown nodeGattaKusthi BO [Image Source : Twitter]
குறைவான பட்ஜெட் போட்டு எடுக்கப்பட்ட இந்த படம் வசூலில் லாபத்தை ஈட்டியுள்ளது. எனவே படம் மிக்பெரிய பிளாக் பஸ்டர் படம் என்று கூறப்படுகிறது. படம் வெளியாகும் முன்பே படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் பெரிய தொகை கொடுத்து வாங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.