சன்னி லியோன் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் ‘ஓ மை கோஸ்ட்’. இந்த படத்தில் பிக் பாஸ் பிரபலம் ஜி.பி.முத்து, தர்ஷா குப்தா, சதிஷ் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
unknown nodeOh My Ghost Audio Trailer Launch [Image Source: Twitter ]
இந்த விழாவில் ஜி.பி.முத்து , சதிஷ், சன்னிலியோன் என பலரும் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சிக்கு சன்னி லியோன் வருகிறார் என்பதால் பல ரசிகர்கர்கள் வருகை தந்தார்கள் என்றால், மேலும் சிலர் ஜி.பி. முத்து வருகிறார் என்று வந்தார்கள்.
unknown nodeOh My Ghost Audio Trailer Launch [Image Source: Twitter ]
நிகழ்ச்சியே மிகவும் ஜாலியாக மக்கள் சிரிக்கும் படி இருந்தது என்றே கூறலாம். இந்த நிலையில், இந்த விழாவில் ஜி.பி. முத்து பால்கோவாவை சன்னி லியோனுக்கு ஊட்டிவிடுகிறார். பிறகு அதே பால்கோவாவை சன்னி லியோனும் ஜிபி முத்துவிற்கு பால்கோவாவை ஊட்டிவிடுகிறார்.
#OhMyGhost | #GPMuthu | #Sunnyleone pic.twitter.com/r2GHaaQHFx
— CineBloopers???? (@CineBloopers) November 3, 2022
பிறகு, இருவரும் மேடையில் பாடலுக்கு குத்தாட்டம் போடுகின்றார்கள். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.