சின்ன திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு போகும் வாணி போஜன்

This cinima news gives information about From small screen to silver screenVani Bhojan-chinnathiraiyil irunthu vellithiraikku pogum vanipojan

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் களமிறங்க இருக்கிறார் நடிகை வாணி போஜன்.இவர் பல சீரியல் தொடர்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

ஜெய்யை வைத்து ‘ஜருகண்டி’ படத்தைத் தயாரித்த நடிகர் நிதின் சத்யா தயாரிக்கும் ஒரு படத்தில் இவர் நாயகியாக களமிறங்குகிறார்.

தமிழ் சினிமாவில் தொலைக்காட்சித்துறையில் இருந்தும் சின்ன திரையில் இருந்தும் வரும் நடிகர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து கொண்டே வருகிறது.

அந்த வகையில் தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் களமிறங்க இருக்கிறார் நடிகை வாணி போஜன்.இவர் பல சீரியல் தொடர்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.இந்நிலையில். இவர் சின்னத்திரையின் நயன்தாரா என செல்லமாக அனைவராலும் அழைக்க பட்டு வருகிறார்.

அந்த வகையில் இவர் தற்போது பிரபல தொலை க்காட்சியில்  ஒளிபரப்பான ‘ஆஹா’ சீரியலின் மூலம்  அறிமுகமானார். அதனை தொடர்ந்து  ‘மாயா’ சீரியலில் நடித்தார். இவர்  ‘தெய்வமகள்’ சீரியலில்  மூலம் இவர் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

ஜெய்யை வைத்து ‘ஜருகண்டி’ படத்தைத் தயாரித்த நடிகர் நிதின் சத்யா தயாரிக்கும் ஒரு படத்தில் இவர் நாயகியாக களமிறங்குகிறார்.இந்தப் படத்தை, சார்லஸ் இயக்குகிறார். இந்த படத்தில் நாயகனாக நடிகர் வைபவ் நடிக்க இருக்கிறார். சஸ்பென்ஸ் த்ரில்லராக இந்தப் படம் உருவாக இருக்கிறது.

சின்ன திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு போகும் வாணி போஜன்