மறைந்த நடிகை சித்ரா கதாநாயகியாக நடித்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!

The crew has released the first look poster of the movie "Calls" starring the late actressThe crew has released the first look poster

மறைந்த நடிகை சித்ரா நடிப்பில் உருவாகியுள்ள “கால்ஸ்”  திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் அனைவரை யும் கவர்ந்தவர் நடிகை சித்ரா. இந்த சீரியலின் மூலம் தனக்கென்று பல ரசிகர்களை பெற்றுக்கொண்டார். மேலும், சித்ரா சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டது சின்னத்திரை திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சித்ராவின் தற்கொலை கான காரணங்களை காவல்துறையினர் விசாரித்து வருகின்றார்கள்.

இந்த நிலையில் தற்போது நடிகை சித்ரா “கால்ஸ் ” என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார் இதுதான் அவருக்கு முதல் படம் ஆனால், அவர் நடித்த முதல் படமே அவருக்கு கடைசி படமாக அமைந்துவிட்டது. மேலும், தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகை சித்ரா மிகவும் தைரியமான பெண்ணாகவும் கம்பீர தோற்றத்துடன் உள்ளார்.

இந்த திரைப்படத்தை இயக்குனர் சபரிஸ் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தை காவிரி செல்வி மற்றும் ஜெயகுமார் தயாரித்துள்ளனர். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.

unknown node