மும்பைகர் படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.
கடந்த 2017 ம் ஆண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியான திரைப்படம் மாநகரம். இந்த திரைப்படம் லோகேஷ் கனகராஜிற்கு முதல் திரைப்படமாகும். இந்த படத்தில் நடிகர் ஸ்ரீ, சார்லி, மதுசூதனன், சந்தீப் கிஷன், ரெஜினா, முனீஸ்காந்த் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருந்தனர். அந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் மிகவும் சிறந்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றது என்றே கூறலாம்.
இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் வாங்கி அவரே இயக்கவுள்ளார். இந்தப் படத்தை தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் தயாரிக்கவுள்ளார்.
இந்த இந்தி ரீமேக்கிற்கு மும்பைகர் என்று தலைப்பு வைத்துள்ளனர். மேலும் நடிகர் விக்ராந்த் மாசே, நடிகர் விஜய் சேதுபதி, ரன்வீர் ஷோரே மற்றும், சச்சின் கடேகர் தன்யா மாணிக்டலா, ஹ்ரிது ஹரூன், சஞ்சய் மிஸ்ரா, ஆகியோர் நடித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
unknown node