இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகவுள்ள படத்திற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வசந்த பாலன் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை தனது பள்ளிக்கால நண்பர்களுடன் இணைந்து தொடங்கிய அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் ஹீரோவாக கைதி, மாஸ்டர், அந்தகாரம் போன்ற படங்களில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் நடிக்கவுள்ளார்.இவருக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிகை துஷாரா விஜயன் நடிக்கிறார்.
மேலும் இந்த படத்திற்கும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பூஜையில் பழனி, அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், சிங்கம் புலி, வசந்த பாலன், ஜிவி பிரகாஷ் ,போன்றோர் கலந்துகொண்டுள்ளார்கள்.
unknown node