இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்சன், கருணாகரன், பிரேம் ஜி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
unknown nodeபடத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். டைம் லூப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று சிம்புவிற்கு ஒரு கம்பேக் திரைப்படமாக அமைந்தது.
unknown node100 நாட்களுக்கு மேலாக சில திரையரங்குகளில் ஓடியது. உலகம் முழுவதும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்ததாகவும் செய்திகள் பரவி வந்தது. இதனையடுத்து மாநாடு படத்தின் உண்மை வசூல் எத்தனை கோடி என்பதை தயரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.
unknown nodeஅதன்படி, மாநாடு திரைப்படம் உலகம் முழுவதும் 117 கோடி வசூல் செய்த மெகா பிளாக் பஸ்டர் திரைப்படமாம். இதுவரை சிம்பு நடிப்பில் வெளியான படங்களில் இது தான் அதிக வசூல் கொடுத்த திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
unknown node