இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில் நடிகைகள்,காயத்திரி, மைனா நந்தினி, ஷிவானி நாரயணன் ஆகியோர் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் “விக்ரம்”. இந்த படத்தை ராஜ் கமல் நிறுவனம் தயாரித்துள்ளது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.
unknown nodeபடத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். அதிரடி ஆக்சன் காட்சிகளை கொண்ட இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி 2 வாரங்கள் ஆகியும் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் படத்திக் கதை மற்றும் திரைக்கதை என்றே கூறலாம்.
unknown nodeஇதையும் படியுங்களேன்-அஜர்பைஜான் நாடாளுமன்றத்தில் சர்தார் பட ஷூட்டிங்!
நாளுக்கு நாள் விக்ரம் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், இதைபோல் வசூலிலும் படம் சக்கபோடுபோட்டு வருகிறது. இந்நிலையில், வெளியான நாளிலிருந்து தற்போது வரை எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.
unknown nodeஅதன்படி, இந்த படம் தமிழகத்தில் மட்டும் 140 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் உலகம் முழுவதும் 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவரை தமிழில் வெளியான படங்களில் 300 கோடி வசூல் செய்த மூன்றாவது திரைப்படம் என்ற சாதனையையும் விக்ரம் படைத்துள்ளது.
unknown nodeஇதற்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 திரைப்படம் உலகம் முழுவதும் 600 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது. அதற்கு அடுத்த படியாக விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது. இதனையடுத்து 3 வது படமாக 300 கோடி வசூல் செய்த பட்டியலில் கமலின் விக்ரம் திரைப்படம் இடம்பிடித்துள்ளது.