ஹாலிவுட் கதையுடன் தளபதிக்காக காத்திருக்கும் பிரபல இயக்குனர்..?

Director Gautam Vasudev Menon has said that he has been preparing a Hollywood story for Vijay and has been waiting a long time.

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் விஜய்க்காக ஹாலிவுட் கதையை தயார் செய்து நீண்ட காலமாக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தற்போது உச்சத்தில் இருக்க கூடிய நடிகர்களில் ஒருவர் விஜய். இவரது திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானால் திருவிழாவை போலதான் இருக்கும். குறிப்பாக சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது. இவர் அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் விஜயை வைத்து இப்போது படத்தை இயக்க பல இயக்குனர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்துள்ளார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் அருமையான கதைகளை படமாக எடுக்கும் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் கௌதம் வாசுதேவ் மேனன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நடிகர் விஜய்க்காக ஹாலிவுட் கதையை தயார் செய்து அவரை வைத்து படம் இயக்கநீண்ட காலமாக காத்துள்ளேன். இந்த கதையை நான் விஜயிடம் இந்த வருட இறுதியில் கூறப்போகிறேன் அவர் சரி என்று கூறுவார் என்று நம்புகிறேன் என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.