விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் மோகன்தாஸ் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷால் காடன், எப்.ஐ.ஆர், ஜெகஜ்ஜால கில்லாடி மற்றும் மோகன்தாஸ் ஆகிய 4 படங்களை தனது கைவசம் வைத்துள்ளார் .இதில் காடன் மற்றும் எப்.ஐ.ஆர் ஆகிய படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி உள்ளது.அதிலும் ராணாவுடன் விஷ்ணு விஷால் நடித்துள்ள காடன் திரைப்படம் மார்ச் 26-ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் விஷ்ணு விஷால் அடுத்ததாக நடிக்கவிருக்கும் மோகன்தாஸ் படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.விஷ்ணு விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் மோகன்தாஸ் படத்தில் ஏற்கனவே விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்துள்ள ஷரவந்தி சாய்நாத் என்பவர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் டீசர் கடந்தாண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றதும் ,அதில் சைக்கோ கொலைகாரராக விஷ்ணு விஷால் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
unknown node