தமிழ் திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நிக்கி கல்ராணி. இவர் நடிகர் ஆதியை காதலிக்கும் விவகாரம் அண்மையில் வெளியில் தெரிய வந்த நிலையில், இவர்கள் இருவரும் அண்மையில் பிரமாண்டமாகக் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
நிக்கி கல்ராணியின் சகோதரி தான் சஞ்சனா கல்ராணி. இவர் தமிழ் மற்றும் கன்னட மொழி திரைப்படங்கள் பலவற்றில் நடித்துள்ளார். போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட பின் கடந்த ஆண்டு வெளியில் வந்து, பின் புதிதாக திருமணம் செய்து கொண்டார். மேலும், தற்பொழுது இவர் 8 மாத கர்ப்பமாகவும் உள்ளார்.
இந்நிலையில் இவர் தனது தலைமுடி முழுவதுமாக நீக்கி உள்ளது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பார்ப்பவர்களின் கண்களில் தான் அழகு இருக்கிறது. அதனால் தான் என் தலைமுடி முழுவதையும் கடவுளிடம் தானம் செய்துள்ளேன். எத்தனையோ கஷ்டங்களை கடந்து வந்த பின்னும் எனது வாழ்க்கை அழகாகத்தான் இருக்கிறது. கடவுள் கொடுத்த அனைத்திற்கும் நன்றி என இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
unknown node