தண்ணீர் பஞ்சம் குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்ட பிரபல நடிகை!
நடிகை ஸ்ரீ திவ்யா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், பல இடங்களில் நிலவி வரும் தண்ணீர் பிரச்னை குறித்து பல பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை ஸ்ரீ திவ்யாவும் தண்ணீர் பிரச்னை குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ திவ்யா பதிவிட்டுள்ள பதிவில், நிதி ஆயோக் அறிக்கையின் அடிப்படையில், இந்தியாவின் 21 நகரங்களில் 2020-ம் ஆண்டு நீர்நிலைகள் முற்றிலும் வறண்டுவிடும். சென்னை தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் ஆறாவது பெரிய நகரம் என தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த பதிவில், நாட்டை தண்ணீர் பஞ்சத்திலிருந்து காக்க இன்னும் 5 ஆண்டுகள் மட்டுமே நம்மிடம் உள்ளது என பதிவிட்டுள்ளார்.
https://t.co/aVJVCpcQr6https://t.co/KqceTXhgBm
21 Indian Cities to run out of Groundwater by 2020-NITI AAYOGCHENNAI-India's 6th biggest city is nearly out of water-CNN
Southwest monsoon’s current rainfall deficit is 38%- IMD
India has just 5 yrs to solve its water crisis !! pic.twitter.com/ybshHE6zP1
— Sri Divya (@SDsridivya) July 2, 2019