நடிகர் கமலுடன் இணைந்த பிரபல நடிகை….!!

Default Image
  • நடிகர் கமல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார்.
  • மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த நடிகை கோவை சரளா.

நடிகர் கமல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இவர் சினிமா துறையில், பல படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளார். இவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.

இந்நிலையில், தற்போது இவர் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். கமலஹாசன் கடந்த சில வருடங்களாக அரசியலில் ஈடுபட்டு, மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியையும் துவங்கியுள்ளார்.

Image result for நடிகை கோவை சரளா

இந்த கட்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு கிடைத்தாலும், சினிமா வட்டாரத்தில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து நடிகை கோவை சரளா உட்பட 100-க்கும் மேற்பட்ட  பிரபலங்கள் இந்த கட்சியில் இணைந்துள்ளனர்.

நடிகை கோவை சரளா இந்த கட்சியில் இணைந்த பிறகு கூறியதாவது, ” மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மகளீரின் ஆதரவு பெருகிக் கொண்டிருக்கிறது என்றும், மக்களின் மனநிலையை சினிமா நடிகர்களால் தான் புரிந்து கொள்ள முடியும்” என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்