படப்பிடிப்பின் போது நிலை தடுமாறி கீழே விழுந்த பகத் ஃபாசில்.!

Actor fahad fazil unexpectedly stumbled and fell during the filming, much to the grief of the fans.

படப்பிடிப்பின் போது நடிகர் பகத் ஃபாசில் எதிர்பாரா விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்த சம்பவம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பகத் ஃபாசில் .நடிகை நஸ்ரியாவின் கணவரான இவர் தமிழில் வேலைக்காரன் , சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார் . தற்போது இவர் ‘மலையன் குஞ்சு’ என்ற சஜிமோன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

அதற்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டு வரும் பகத் ஃபாசில் விபத்தில் சிக்கியுள்ள சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆம் இந்த படத்தில் வீடு முழுவதும் நீரில் மூழ்குவது போன்ற காட்சி உள்ளதாகவும்,அதற்காக செட்டிங் வீடு ஒன்று அமைக்கப்பட்டிருந்ததாகவும் , அதிலிருந்து கீழே விழும் படியான காட்சியில் பகத் ஃபாசில் எதிர்பாரா விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார் .அதில் அவருக்கு மூக்கில் அடிப்பட்டுள்ளது.உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறிய காயம் என்று கூறி ஓய்வு எடுக்க கூறியதாக கூறப்படுகிறது.