'ரஜினிகாந்திற்கு கூட இதுபோன்ற காட்சி அமைந்ததில்லை'-கர்ணன் பட அறிமுக காட்சி குறித்து தயாரிப்பாளர்.!

Producer Kalaipuli S Thanu has said that a scene like the intro scene of Karnan has never been set for Rajinikanth.

கர்ணன் படத்தின் அறிமுக காட்சி போன்ற ஒரு காட்சி ரஜினிகாந்திற்கு கூட அமைந்ததில்லை என்று தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தெரிவித்துள்ளார்.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். நடிகை ராஜீஷா விஜயன் இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

சமீபத்தில் கர்ணன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் ஏப்ரல் 9-ம் தேதி திரையரங்குகளில் கர்ணன் திரைப்படம் ரிலீஸாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.அது மட்டுமின்றி ‘கண்டா வர சொல்லுங்க’ என்ற பாடலும் வெளியாகி ஹிட்டடித்தது.இந்த நிலையில் திரையில் கர்ணனை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் கர்ணன் பட தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணு கர்ணன் படத்தில் தனுஷின் அறிமுக காட்சியை பார்த்து விட்டு பாராட்டி உள்ளதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் .அவர் கூறியதாவது, கர்ணன் படத்தின் அறிமுக காட்சியை பார்த்து விட்டு தனுஷிற்கு கால் செய்து கர்ணன் படத்தில் தனுஷின் அறிமுகம் போன்ற ஒரு அறிமுக காட்சி எந்த படத்திலும் இல்லை ,அதிலும் ரஜினிகாந்திற்கு கூட இது போன்ற அறிமுக காட்சி கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.அதனுடன் இயக்குனர் மாரி செல்வராஜின் அற்புதமான பணியையும் தயாரிப்பாளர் பாராட்டியுள்ளார்.இந்த தகவலால் கர்ணன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.