எதற்கும் துணிந்தவன் படத்திலிருந்து இரண்டாவது பாடலாக உள்ளம் உருகுதையா எனும் டூயட் மெலடி பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
சூர்யா நடிப்பில் அடுத்து விறுவிறுப்பாக தயாராகி வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். சூரரை போற்று, ஜெய் பீம் திரைப்பட OTT வெற்றியை அடுத்து உருவாகி வரும் திரைப்படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. சூர்யாவை பெரிய திரையில் பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகிறது. பிரியங்கா மோகன், வினய் என பலர் நடித்து வருகின்றனர்.
டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். ஏற்கனவே வாடா ராசா எனும் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது. உள்ளம் உருகுதையா எனும் டூயட் மெலடி பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
unknown node