என்னது விஜய் படத்தை பார்த்து அமலாபால் பயந்துட்டாங்களா….!!!
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது படங்களை கண்டு கொண்டாடாத ரசிகர்களே இல்லை. இவர் வருடந்தோறும் புதுப்புது படங்களை உருவாக்கி வெளியிட்டுள்ளார். இவரது படத்தை பார்ப்பதற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் பிரபல நடிகையான அமலாபால் பேட்டி அளிக்கும் போது விஜய் குறித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, அவரது பள்ளி பருவத்தின் போது வகுப்பை புறக்கணித்துவிட்டு விஜய்யின் போக்கிரி படத்தை பார்க்க தனது இரு தோழிகளுடன் சென்றுள்ளார். அப்போது அவர் பயத்துடன் படத்தை பார்த்ததாகவும், அந்த படத்தின் டோலு டோலு பாடலிற்கு நடனமாடியதாகவும் கூறியுள்ளார்.
அமலாபால் விஜய்யின் தலைவா படத்தில் அவருடன் ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.