நடிகை பூஜா பத்ரா மலையாளம் மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வருபவர். இவர் நடிகர் அஜித்தின் கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை பூஜாவுக்கு, டாக்டர்.சோனு அணுவாலா என்பவருக்கும் 2002-ல் அமெரிக்காவில் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து, 2010-ல் பூஜா கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றார். அதன் பின் இந்தியா திருப்பிய இவருக்கு நடிகர் நவாப் ஷாவுடன் நெருக்கம் ஏற்பட்டது.
unknown nodeநவாப் ஷா தற்போது தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நவாப் ஷா மற்றும் பூஜா பத்ரா இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 4-ம் தேதி இவர்களது திருமணம் ஆர்ய சமாஜ் முறைப்படி நடந்து முடிந்துள்ளது.