AK61-படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிப்பது யார் தெரியுமா.?

நடிகர் அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்க படத்திற்கு

நடிகர் அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.

unknown node

இந்த படத்திற்கான பாதி கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில்  முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதற்கிடையில், ஐரோப்பிய டூரில் பைக்கில் வலம் வந்து கொண்டிருக்கிறார் அஜித்.

unknown node

விரைவில் சென்னையில் தொடங்கவுள்ள அடுத்த கட்ட படப்பிடிப்பில் அவர் இணைவார் என தெரிகிறது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்பது அனைவர்க்கும் தெரியும்.

unknown node

ஆனால், படத்தில் வில்லனாக யார் நடிக்கிறார் என்பது யாருக்குமே தெரியாது. இதனையடுத்து, அதற்கான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, தெலுங்கு நடிகரான அஜய் தான் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறாராம். இவர் ஏற்கெனவே அஜித்துடன் கிரீடம் படத்தில் நடித்திருந்தார்.

unknown node

விஜய்யின் ‘வேலாயுதம்’, சூர்யாவின் ’24’ உட்படச் சில தமிழ்ப் படங்களில் நடித்தவர். சமீபத்தில் வெளியான புஷ்பா, சர்காரு வாரி பாட்டா, ஆச்சார்யா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். கிரீடம் படத்தை தொடர்ந்து நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.