பணம் கொடுத்து அந்த விஷயத்தை பண்றேனா? ஜான்வி கபூர் காட்டம்!
ஜான்வி கபூர் : பிரபல நடிகையான ஜான்வி கபூர் பெயர் பாலிவுட் பக்கம் பெரிய அளவில் பேசப்படுவது போல தமிழிலும் அவருக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. எனவே, அவரை பற்றி ஒரு சின்ன தகவல் வெளியானால் போதும் அதுவும் ஒரு ஹாட் டாப்பிக்காக மாறிவிடும். தமிழில் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை அப்படி இருந்தாலும் அவருக்கு எப்படி ரசிகர்கள் என்ற கேள்வியும் ஒரு பக்கம் இருக்கிறது.
அதற்கு பதில் என்னவென்றால் அவருக்கு தமிழில் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்க முக்கிய காரணமே அவர் கவர்ச்சியாக உடை அணிந்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டது தான். அவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் தான் அவரை எங்கேயோ கொண்டு சென்றது என்றே சொல்லலாம்.
இதன் காரணமாக இவருடைய செய்திகள் பற்றிய விவரங்களும் தமிழ் சினிமாவில் பேசப்படுவது உண்டு. அப்படி தான் தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட் பக்கமும் ஜான்வி கபூர் பற்றிய கிசு கிசு ஒன்று பெரிய அளவில் பேசப்பட்டது. அது என்னவென்றால், ஜான்வி கபூர் பணம் கொடுத்து தன்னை புகழ்ந்து பேச வைத்து பிரபலமாகி வருகிறார் என்ற தகவல் வைரலாக பரவியது.
இதனையடுத்து, இந்த கிசு கிசு தகவல்களுக்கு டென்ஷனான நடிகை ஜான்வி கபூர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர் “என்னை பற்றி இப்படியான சில பொய்யான தகவல் பரவுவதை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. என் மீது எனக்கு நம்பிக்கை அதிகம்.
என்னுடைய நடிப்பை பார்த்து மக்கள் என்னை பாராட்டுவார்கள் அது அவர்களுடைய விருப்பம். ஆனால், என்னை பற்றி பெருமையாக பேச நானே காசு கொடுத்து சொல்ல வைக்கும் அவசியம் எனக்கு இல்லவே இல்லை. என்னுடைய நடிப்பை மக்கள்தான் மதிப்பிட வேண்டும். ஆனால் சமூக வலைதளங்களில் சிலர் தவறுதலாக விஷயங்களை பரப்பி கொண்டு இருக்கிறார்கள். நான் பணம் தருகிறேன் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர். அவர்கள் என் PR அல்ல. காசு கொடுத்துப் பாராட்டும் அளவுக்கு என்னிடம் பட்ஜெட் இல்லை” எனவும் நடிகை ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். மேலும், நடிகை ஜான்வி கபூர் தற்போது Ulajh, தேவரா: பகுதி 1 ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.