காக்க காக்க படத்தின் கதையை முதலில் கேட்ட மூன்று நடிகர்கள்... யார் யார் தெரியுமா..?

Director Gautham Vasudev Menon has said that he first told the story of the 2003 film Kakka Kakka starring Surya to Vikram and Vijay Ajith.

சூர்யா நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான காக்க காக்க படத்தின் கதையை முதலில் விக்ரம் மற்றும் விஜய் அஜித் ஆகியோரிடம் தான் கூறினேன் என்று இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் அருமையான கதைகளை படமாக எடுக்கும் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் காக்க காக்க. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடித்திருந்தார். இசையமைப்பார் ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருந்த இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் சாதனையையும் செய்தது.

இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு பேட்டியில் காக்க காக்க படத்தை பற்றி சில விஷியங்களை கூறியுள்ளார். இதில் அவர் கூறியது” காக்க காக்க திரைப்படம் எனக்கு மிகவும் முக்கியமான திரைப்படம். இந்த படத்தின் கதையை நான் முதன் முதலாக சூர்யாவிடம் கூறவில்லை, விக்ரம் மற்றும் விஜய் அஜித் ஆகியோரிடம் தான் கூறினேன் ஆனால் இவர்கள் மிகவும் பிசியாக வேறு படங்களில் கமிட் ஆகிருந்ததால் நடிக்கவில்லை. அதற்கு பிறகு சூர்யாவிடம் கதையா கூறினேன் அவர் சரி என்று கூறி நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்றும் கூறியுள்ளார்.