ஷிவாங்கிக்கு பிடித்த ஹீரோ யார் தெரியுமா..??

Shivangi said in a recent interview that his favorite actor is Vijay

ஷிவாங்கி தனக்கு பிடித்த நடிகர் விஜய் என்று சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது என்றே கூறலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த நிகழ்ச்சியை கண்டுகளித்து வருகின்றார்கள். இதற்கு முக்கியமான காரணம் சமையல் நிகழ்ச்சியை காமெடியாக கொண்டு செல்வதுதான்.

இந்த நிகழ்ச்சியில் மூலம் மிகவும் பிரபலமாகி வருபவர் ஷிவாங்கி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகராக களமிறங்கி தற்போது தனக்கென்று எதார்த்தமான பேச்சால் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவரிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்ற கேள்வி கேட்டகப்பட்டுள்ளது. அதற்கு சிறிதும் தயக்கமில்லாமல் சிரித்து கொண்டே எனக்கு ரொம்ப பிடித்த நடிகர் தளபதி விஜய் தான் என்று கூறியுள்ளார்.