தளபதி 63 படத்தின் ப்ர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகிறது தெரியுமா

This news gives information about Do you know when the first Look of the Commander 63 is released?-thalapathy 63 padathin first look poster eppothu veliyakirathu theriyuma

தளபதி விஜய் சர்கார் எனும் மாபெரும் வெற்றி படத்தை அடுத்து தற்போது அட்லீயுடன்  கூட்டணி சேர்ந்து “தளபதி 63” எனும் படத்தில் மிகவும் விறு விறுப்பாக நடித்து வருகிறார்.

தற்போது இந்த படத்தின் ப்ர்ஸ்ட் லுக் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் சர்கார் எனும் மாபெரும் வெற்றி படத்தை அடுத்து தற்போது அட்லீயுடன்  கூட்டணி சேர்ந்து “தளபதி 63” எனும் படத்தில் மிகவும் விறு விறுப்பாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தை AGS நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நடிகை நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதையடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் மாபெரும்  செட் அமைத்து நடைபெற்று வருகிறது.

மேலும் அந்த புகைப்படங்களும் ,வீடியோகளும் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி வருகிறது. எனவே விஜய் ரசிகர்கள் இந்தபடத்தின் லேட்டஸ்ட் அப்டேட் குறித்து ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

தற்போது இந்த படத்தின் ப்ர்ஸ்ட் லுக் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.  AGS தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவனான ஐஸ்வர்யா கல்பாத்தி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் 11 புள்ளிகள் வைத்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

எனவே இதை பார்த்த ரசிகர்கள் வரும் 11 ந் தேதி இந்த படத்தின் ப்ர்ஸ்ட் லுக் வெளியாக இருப்பதாக கூறிவருகிறார்கள். இருப்பினும் இது குறித்து இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.