நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “யானை”. இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.சமுத்திரக்கனி, சரண்யா ரவி, யோகி பாபு, அம்மு அபிராமி, விஜய் டிவி புகழ், ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளர்கள்.
unknown nodeஇந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ட்ரம்ஸ்டிக் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கான டிரைலர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பு அதிகமாகியது.
இதையும் படியுங்களேன்-எந்த தமிழ் படமும் செய்யாத சாதனை.! 2 வாரத்தில் முடித்துக்காட்டிய ஆண்டவர்.! காரணம் அந்த நபர் தான்
unknown nodeஇந்த படம் வரும் ஜூன் 17-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
unknown nodeஏனென்றால், கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான விக்ரம் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருவதால், கமலை நேரில் சந்தித்து இயக்குனர் ஹரி மற்றும் அருண் விஜய் விக்ரம் வெற்றிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் விக்ரமுக்கு உரிய மரியாதையுடன் யானை படத்தை வரும் ஜூன் 1-ஆம் தேதி வெளியீடவுள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
unknown node